Untitled

சினம்

பாவலர் கருமலைத்தமிழாழன்

பாலுக்குள் உள்ளநெய்யோ உடலைப் பேணும்
—–படைக்கின்ற உணவிற்கோ சுவையைச் சேர்க்கும்
நூலுக்குள் உளகருத்தோ அறிவைக் கூட்டும்
—–நுவல்கின்ற அனுபவத்தை எழுத்தில் காட்டும்!
ஆலுக்குள் உளவிதையோ விருட்ச மாகும்
—–ஆயிரம்பேர் அமர்தற்கு நிழலு மாகும்
நாலுக்குள் உளஇரண்டாய் நெஞ்சிற் குள்ளே
—–நாம்வைக்கும் சினமோநம் வாழ்வைத் தீய்க்கும்!

அரும்பாடு பட்டமைத்த கரையான் புற்றுள்
—–அழையாமல் நுழைகின்ற பாம்பைப் போன்று
திருவான நெஞ்சிற்குள் சினம்பு குந்தால்
—–தினமுழைத்துச் சேர்த்தபுகழ் நொடியில் சாயும்!
எருவிட்டு வளர்த்தபயிர் புயலால் சீறி
—–எழுந்தமழை வெள்ளத்தால் அழுகல் போன்று
உருவாக்கி வைத்தஉயர் பெருமை நெஞ்சுள்
——ஊடுருவும் சினம்சூழ்ந்து விழுங்க மாயும் !

அறிவாளி என்பவனோ தன்னைத் தானே
—–அடுக்கடுக்காய் வினாக்களினைக் கேட்டுக் கொண்டே
அறியாமைப் போக்குதற்கு விடைகள் தேடி
—–அறிவுதனைப் பெருக்கிடுவான் பொறுமை யாலே
அறிவில்லா முட்டாளோ ஆய்ந்தி டாமல்
—–அடுத்தவரை வினாகேட்டுத் தன்னைத் தானே
அறிவற்ற மடையனென வெளிச்சம் போட்டே
—–அனைவருக்கும் காட்டிடுவான் சினத்தி னாலே !

மற்றவர்கள் கூறுவதை நன்றாய்க் கேட்டு
—–மனத்துள்ளே அதைவாங்கி உணர்ந்த பின்பே
ஒற்றைச்சொல் சொல்லுதற்கும் எண்ணி எண்ணி
—–ஒளிர்முத்தாய் அறிவாளி நாவு திர்ப்பான்
சொற்கள்தம் பொருளறிய முயன்றி டாமல்
—–சொல்லுகின்ற இடம்ஏவல் புரிந்தி டாமல்
மற்றவர்தம் கருத்துதனைக் கேட்டி டாமல்
—–மடத்தனமாய் சினம்கொண்டோன் நாவு திர்ப்பான் !

சினத்தோடே ஆவேசம் சேரும் போது
—–சிந்தித்துச் செயல்செய்யும் அறிவு போகும்
சினத்தீயாய் எரித்தபோதும் உணர்ச்சி தன்னில்
—–சிதறாமல் செயல்படுவோன் நல்லறி வாளி
மனந்தன்னை அடக்குதற்கே இயன்றி டாமல்
—–மண்தன்னில் சினம்கொண்டோன் இகழ்ச்சி கொள்வான்
தனக்குள்ளே சினம்புதைத்தே அறிவைத் தேடித்
—–தகுசெயலைச் செய்பவனே உயர்வான் என்றும் !

அன்புதனை நாம்வளர்த்தால் அணைக்கும் சுற்றம்
—–அறிவுதனை நாம்வளர்த்தால் அழைப்பர் சான்றோர்
வன்மையெனும் சினம்வளர்த்தால் பெற்றெ டுத்து
—–வளர்த்திட்ட பிள்ளைகளும் ஒதுக்கி வைப்பர்!
தன்கையால் தன்னுடற்குக் கொள்ளி வைக்கத்
—–தவறான வழிகாட்டும் சினத்தை விட்டுப்
புன்னகையை முகமேந்தி மென்மைப் பேச்சில்
—–புரிகின்ற நற்செயல்தாம் உயர்த்தும் நம்மை !

15181339_1240098372737681_8266730026822644914_n

அன்னை

அன்னை

பாவலர்  கருமலைத்தமிழாழன்

1526729_10203064050242534_5043997524968278887_n

அன்னைக்கு   மாற்றுண்டோ   அம்மா   என்னும்

                     அமுதச்சொல்   சுவைதனுக்கே   ஈடு   முண்டோ

தன்வயிற்றுள்   பத்துமாதம்   சுமந்து   பெற்று

தன்குருதி   பாலாக்கி   ஊட்டி   விட்டு

          பொன்னான   குழந்தைகுடல்   ஏற்கும்   வண்ணம்

                         பொழுதெல்லாம்   பத்தியத்தில்   உணவு   உண்டு

    தன்வயிறு   காய்ந்தபோதும்   பிள்ளை   கட்குத்

                    தந்துணவு   மகிழ்பவளே   அன்பு   அன்னை !

          தவழ்ந்துவரும்   குழந்தையதன்   அழகு   பார்த்து

                        தத்திதத்தி   நடைபயிலும்   எழிலைப்   பார்த்து

குவளைமலர்   கண்விரிய   முத்த   மிட்டு

                          கூடியுள்ளோர்   கண்ணேறு    கழித்துப்  போட்டு

தவறிசிறு   எறும்புகடித்   கழுத   போது

                            தன்னுடலும்   மனம்பதற   வாரி   யணைத்து

                    தவமியற்றும்   கவனமுடன்   நாளும்   வளர்த்துத்

                                     தலைநிமிர்த்தி   மகிழ்பவளே    அன்பு   அன்னை !

மருமகளின்   அணைப்பிற்குள்   மகனும்   வீழ்ந்து

          மனம்நோக   மொழிகளினை   உதிர்த்த   போதும்

    அரும்பெயரன்   பெயர்த்தியொடு    அகம்ம   கிழ்ந்தே

  அழகான   குடும்பமெனக்   கட்டிக்   காத்துப்

பெருமையினை    நிலைநிறுத்த   ஏள   னத்தை

                         பெருமூச்ச   தனில்விழுங்கி   நகைமு   கத்தில்

                                                          திருவாக   இல்லத்தின்    தீப    மாக

திகழ்ந்துவழி   காட்டுபவள்    அன்பு   அன்னை !

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!